- Pallipalayam
- சித்தி விநாயகர் கோவில்
- பள்ளிபாளையம்-திருச்செங்கோடு சாலை
- உணவு பாதுகாப்பு அதிகாரி
- ரெங்கநாதன்
- தின மலர்
பள்ளிபாளையம், ஜூலை 12: பள்ளிபாளையம் -திருச்செங்கோடு ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோயில் அருகே உள்ள இறைச்சி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். கடையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரெங்கநாதன் சோதனையிட்டார். இதில் முதல்நாள் வெட்டப்பட்ட 30 கிலோ பழைய இறைச்சி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதல் நாள் மீதமான கறிகளை பிரிட்ஜில் வைத்து குளிரூட்டி, அடுத்த நாள் வெட்டப்படும் ஆட்டு கறியுடன் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். தொடர்ந்து பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்த 30 கிலோ ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை நகராட்சி லாரி மூலம் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர். பழைய இறைச்சியை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு ₹3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
The post கடைகளில் பிரிட்ஜில் வைத்த 30 கிலோ மட்டன் பறிமுதல் appeared first on Dinakaran.