×
Saravana Stores

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம்: வாஷிங்டன் சுந்தர்

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா நேற்று முன்தினம் வென்றது. அதில் 4ஓவர்களை வீசி 15ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய வாஷிங்டன் சுந்தரும் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அதனால் ஆட்ட நாயகன் விருதுப் பெற்ற வாஷிங்டன், ‘எப்போதெல்லாம் நாட்டுக்காக விளையாடுகிறேனோ அப்போதெல்லாம் அற்புதமாக உணர்கிறேன். உட்களம் சிறப்பாக இருந்தது. இது உண்மையில் பேட்ஸ்மேன்ளுக்கான களம். முதல் 2 ஆட்டங்களிலும் பந்துவீச்சாளர்களுக்கு அதிக வேலை இருந்தது. எங்கள் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினர்.

அதே நேரத்தில் ஜிம்பாப்வேயின் மேயர்ஸ், கிளைவ் இணை சிறப்பாக விளையாடிய போது எங்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. அவர்களை கட்டுப்படுத்த எங்களால் இயன்ற திட்டங்களை செயல்படுத்த விரும்பினோம். அதனை செயல்படுத்தியதில் பலன் கிடைத்தது. சனிக்கிழைமை நடைபெறும் 4வது ஆட்டத்தில் வெல்வதின் மூலம் தொடரை கைப்பற்றுவோம் ’ எனறார். ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா, அடுத்த 2 ஆட்டங்களிலும் வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

The post ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம்: வாஷிங்டன் சுந்தர் appeared first on Dinakaran.

Tags : Zimbabwe ,Washington Sundar ,Harare ,India ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும்...