- கோபா கோப்பை கால்பந்து
- கொலம்பியா
- சார்லோட்
- கோபா அமெரிக்கக் கோப்பை
- ஐக்கிய மாநிலங்கள்
- உருகுவே
- சார்லோட், வடக்கு கலிபோர்னியா
- தின மலர்
சார்லெட்: தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடக்கிறது. வடக்கு கலிப்போர்னியாவின் சார்லெட் நகரில் நேற்று நடந்த 2வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்கள் கொலம்பியா-உருகுவே அணிகள் மல்லுக்கட்டின. உலகத் தரவரிசையில் முன்வரிசயைில் உள்ள கொலம்பியா(12), அடுத்து உள்ள உருகுவே(14) என 2 அணிகளும் லீக் சுற்றில் இருந்து ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத அணிகள். அதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. எனினும் முன்னாள் உலக சாம்பியனுமான உருகுவேயின் வீரர்கள் கூடுதல் வேகத்தடன் விளையாடினர். இருப்பினும் ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் ஜெஃபர்சன் லெர்மா கோலடித்து அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார்.
முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் கொலம்பியாவின் டேனியல் முனாசுக்கு 2வது முறை மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒரே ஆட்டத்தில் 2வது முறை மஞ்சள் அட்டை காட்டப்பட்டதால் அவரை சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார் நடுவர். அதனால் 2வது பாதியில் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடி கொலம்பிய அணிக்கு ஏற்பட்டது. அதனால் உருகுவேயால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இத்தனைக்கும் 2வது பாதியில் உருகுவே வசம்தான் பந்து அதிக நேரம் இருந்தது. இருந்தும் ஆட்ட முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற கொலம்பியா, 3வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. கொலம்பியா இறுதி ஆட்டத்தில் ஜூலை 15ம் தேதி நடப்பு சாம்பியன் அர்ஜென்டீனாவை எதிர்கொள்கிறது.
The post கோபா கோப்பை கால்பந்து:10 வீரர்களுடன் விளையாடி பைனலுக்கு முன்னேறிய கொலம்பியா appeared first on Dinakaran.