×
Saravana Stores

மீண்டும் பைனலில் இங்கிலாந்து: யூரோ கோப்பை கால்பந்து

டார்ட்மண்ட்: ஜெர்மனியில் நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டம் டார்ட்மண்ட் நகரில் நேற்று நடந்தது. முன்னாள் சாம்பியனான நெதர்லாந்து 1988ம் ஆண்டு கோப்பையை வென்ற பிறகு ஒரு முறை கூட பைனலை பார்த்ததில்லை. எனவே நெதர்லாந்து பைனலுக்கு முன்னேறும் முனைப்பில் ஆரம்பம் முதலே வேகம் காட்டியது. அதன் பலனாக ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து நெதர்லாந்து முன்னிலைப் பெற்றது. இங்கிலாந்து கோல் பகுதிக்கு வெளியே இங்கிலாந்து வீரர் ரைசிடமிருந்து கைப்பற்றிய பந்தை சிமோன்ஸ அதிவேகமாக அடிக்க, எதிரணி வீரர்களை கடந்து கோலானது.

அதன் பிறகு தொடர்ந்து 2வது முறையாக அரையிறுதியில் விளையாடும் இங்கிலாந்துக்கு ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஒரு ‘பெனால்டிக் கிக்’ வாய்ப்பு கிடைத்தது. நெதர்லாந்து கோல் பகுதியில், டென்சல் பந்தை தடுக்கும் முயற்சியின் போது ஹாரி காலில் பட்டது. ஹாரி படுத்துக் கொண்டு வலியால் துடித்தார். அடுத்து காணொளியை ஆய்வு செய்த நடுவர் இங்கிலாந்துக்கு ‘பெனால்டி கிக்’ வாய்ப்பளித்தார். அந்த அடிப்பட்ட காலாலேயே உதைத்து கோலாக்கினார் ஹாரி. அதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் கிடைத்த சமநிலை, முதல் பாதி வரை தொடர்ந்து. பின்னர் 2வது பாதியில் இரு அணிகளும் கோலடிக்கும் முயற்சியில் மல்லுக் கட்டின. கோல் கீப்பரகளின் எச்சரிக்கையாலும், இலக்கு தப்பியதாலும் இரு அணி வீரர்களும் ஏமாற்றமடைந்தனர்.

தொடர்ந்து 79வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் சாகா அடித்த கோல் ஆய்வுக்கு பிறகு ‘ஆப் சைடு’ என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஹாரி கேனுக்கு பதிலாக ஒல்லி வாட்கின்ஸ் களமிறங்கினார். இரு தரப்பிலும் பதிலி ஆட்டக்காரர்கள் வாய்ப்புகளை பெற்றனர். ஆனாலும் 90 நிமிடங்களும் சமநிலையில் முடிய, விடுப்பட்ட நேரத்துக்காக, 4 நிமிடங்கள் கூடுதலாக விளையாடினர். அப்போது 91வது நிமிடத்தில் பதிலி ஆட்டக்காரர் வாட்கின்ஸ் கோலடித்து இங்கிலாந்து அணிக்கு முன்்னிலைப் பெற்று தந்தார். அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வர இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. கூடவே தொடர்ந்து 2வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. ஜூலை 14ம் தேதி நள்ளிரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் இங்கிலாந்து மோதுகிறது.

* கோஹ்லி ஒரு ‘கோட்’
கால்பந்து உலகில் பிரபலமானவர் சுவீடன் வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக்(42). கடந்த ஆண்டு வரை இத்தாலியின் ஏசி மிலன் அணிக்காக விளையாடியவர். அவரிடம் அமெரிக்கவின் யூ டியூபர் டேரன் ஜாசன் ஜூனியர்(ஸ்பீடு) வீடியோ பேட்டியின் போது, ‘விராத் கோஹ்லியை தெரியுமா’ என்று கேட்டார். அதற்கு ‘தெரியாது.’ என ஸ்லாடன் பதில் அளித்தார். அதனால் அதிர்ச்சியடைந்த ஸ்பீடு, ‘கோஹ்லியை தெரியாதா ஆச்சர்யமாக இருக்கிறது’ என்று கூறினார். அதற்கும், ‘அவரை அவமரியாதை செய்யவில்லை. கேள்வி பட்டதேயில்லை’ என்று கூறுகிறார். அதன் பிறகு கோஹ்லியின் படத்தை காட்டி, கோஹ்லி ஒரு கோட் (கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) என்று ஸ்பீடு விளக்கும் காட்சியும் கொண்ட அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

The post மீண்டும் பைனலில் இங்கிலாந்து: யூரோ கோப்பை கால்பந்து appeared first on Dinakaran.

Tags : England ,Euro Cup football ,Dortmund ,Germany ,Netherlands ,Dinakaran ,
× RELATED விக்டோரியா பொது அரங்கு மறுசீரமைப்பு...