நன்றி குங்குமம் தோழி
தொப்பை கொழுப்பை குறைப்பது எளிதல்ல… டயட் மற்றும் உடற்பயிற்சி செய்தும், எதிர்பார்த்த பலன் பலருக்கு கிடைப்பதில்லை. நம் உடலில் தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேர்வது வழக்கம். அதற்கான உடற்பயிற்சிகளை ெதாடர்ந்தாலும், அதனை குறைக்க ஆரோக்கிய வழிமுறைகளை பார்க்கலாம்.
*காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கலாம். வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த எலுமிச்சை நீர் செரிமானத்தை ஊக்குவித்து, உடலின் நச்சுகளை வெளியேற்றுகிறது மற்றும் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்கிறது.
*கொழுப்பை எரிக்கும் சக்தி சீரகத் தண்ணீருக்கு உள்ளது. செரிமானத்தை மேம்படுத்தும். வயிறு வீக்கத்தை நீக்கி தொப்பை கொழுப்பை அகற்றும்.
*புரதம் உடல் ஆற்றலுக்கு ஆதாரமாகும். உங்கள் காலை உணவில் புரதத்தை சேர்ப்பது, தசைகளை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் பசி உணர்வினை கட்டுப்படுத்தும். புரோட்டீன் ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் குறைக்க உதவுகிறது.
*முழு தானியங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கலோரியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுவதோடு, பெண்களின் தொப்பை கொழுப்பையும் நீக்கும்.
*உடல் பருமன் ஒரு அழற்சி நிலை. எனவே, இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த குர்குமின் போன்ற மசாலாப் பொருட்கள், ஜிங்கிபெரேசி, அதன் அழற்சி எதிர்ப்பு கூறுகளுடன் உடல் பருமன் பிரச்னையை தீர்க்க உதவும். குர்குமின் பொடிகளை உங்கள் மசாலாப் பொருட்களோடு சேர்த்துக் கொள்வது நல்லது.
*எந்த எடை இழப்பு பிரச்னைக்கும் தண்ணீர் முக்கியமானது. தண்ணீர் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். இதுவும் உங்கள் தொப்பை கொழுப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
தொகுப்பு: பிரியா மோகன்
The post கொழுப்பை குறைப்போம் ஸ்லிம்மாக மாறுவோம்! appeared first on Dinakaran.