×
Saravana Stores

இலவச தையல் இயந்திரம் பெற பதிவு செய்ய அழைப்பு

நாமக்கல் ஜூலை 11: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி மற்றும் திருமணமாகாத மகள்கள், மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில், தையல் பயிற்சி முடித்து சான்று பெற்று, அதன் மூலம் இலவச தையல் இயந்திரம் பெறாதவர்கள், நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன், வரும் 27ம் தேதிக்குள் நேரில் பதிவு செய்யவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

The post இலவச தையல் இயந்திரம் பெற பதிவு செய்ய அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Uma ,Namakkal district ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம்