×
Saravana Stores

ஆட்டோவுடன் கடத்தப்பட்ட கணவரை மீட்டுத்தர வேண்டும் எஸ்பி அலுவலகத்தில் மனைவி புகார் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது

வேலூர், ஜூலை 10: எனது கணவரான ஆட்டோ டிரைவரை மர்ம ஆசாமிகள் கடத்திச்சென்றுள்ளனர். அவரை மீட்டு தர வேண்டும் என்று எஸ்பி அலுவலகத்தில் அவரது மனைவி நேற்று புகார் மனு அளித்தார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சித்ரா(34). இவர் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘என்னுடைய கணவர் பழனி(37). எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவர் பழனி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 7ம் தேதி கணவருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் சென்றேன். பின்னர் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் என்னை ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டு விட்டு, டிரைவர் சீட்டின் இருபுறத்திலும் அமர்ந்து கொண்டு ஆட்டோவுடன் எனது கணவர் பழனியை கடத்திச் சென்றனர். என்னுடைய கணவர் செல்போனுக்கு முதலில் போன் செய்தபோது ரிங் டோன் ஒலித்தது. பின்னர் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய கணவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று இருக்கலாம் என அஞ்சுகிறேன். எனவே எனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்டோவுடன் கடத்தப்பட்ட கணவரை மீட்டுத்தர வேண்டும் எஸ்பி அலுவலகத்தில் மனைவி புகார் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது appeared first on Dinakaran.

Tags : Vellore ,Chitra ,Tiruvalluvar town ,Peranampatu, ,Vellore district.… ,Dinakaran ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...