- திருவப்பதியம்மன் கோயில்
- சால்வேஷன் செண்ட
- வேலூர்
- வேலப்பாடி திராவுபதியம்மன் கோயில்
- வேலூர் வெலப்பாடி
- ஆரணி சாலை ரத்னசிங் குளம்
- மேலந்தை தெரு
- திருவபதியம்மன் கோயில்
- இரட்சித் திணைக்களம்
- வேலூர் வலப்பாடி
வேலூர், ஜூலை 9: வேலூர் வேலப்பாடி திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டு சீல் வைத்தனர்.
வேலூர் வேலப்பாடி ஆரணி சாலை ரத்தினசிங் குளம் மேலாண்டை தெருவில் சர்வே எண் 302ல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான 960 சதுரஅடி கொண்ட வீடு உள்ளது. இந்த வீட்டில் பூங்காவனம் என்பவர் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். இவர் அறநிலையத்துறைக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை ஆண்டு கணக்கில் நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர் மீது அறநிலையத்துறை சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 2005ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதையடுத்து நேற்று காலை அறநிலையத்துறையின் உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் செயல் அலுவலர்கள் பரந்தாமக்கண்ணன், ஏகவள்ளி, சிவாஜி, பிரியா, சரக ஆய்வர்கள் போலீசார் பாதுகாப்புடன் சென்று கோர்ட் உத்தரவை காட்டி, வீட்டில் உள்ளவர்களை வெளியேற்றி வீட்டை மீட்டு அதற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் appeared first on Dinakaran.