×

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்ட வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை


சென்னை: பேரவையில் கேள்வி நேரத்தின் போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசுகையில், ‘‘மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 84 ஏக்கர் இடம் இருக்கிறது. இதில் திருமண மண்டபம், வணிக வளாகம் அமைக்க வேண்டும்,’’ என்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடைபெறுகின்ற திருமணங்கள், நிதிவசதி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.ஆர்.ராஜா: தாம்பரம் தொகுதியில் உள்ள கற்பக விநாயகர், கந்த பெருமாள், சேலையூர் முத்தாலம்மன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும்,’’ என்றார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: கற்பக விநாயகர் கோயிலில் இந்த ஆண்டு இறுதிக்குள் திருப்பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்தப்படும். சேலையூர் முத்தாலம்மன் கோயிலுக்கு 2004ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. உபயதாரர் நிதி ரூ.9 லட்சத்தில் ஒரு மாதத்திற்குள் திருப்பணிதொடங்கப்படும்.

The post மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்ட வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madambakkam ,Thenupureeswarar temple ,S.R. Raja ,Chennai ,Tambaram MLA SR Raja ,DMK ,Madambakkam Tenupuriswarar Temple ,Minister ,P.K.Sekharbabu ,Thenupureeswarar ,temple ,
× RELATED மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில்...