×

வேலு சொல்லி முருகன் கேட்காமல் இருப்பேனா?.. மயிலாப்பூர் திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்


சென்னை: பேரவையில் நேற்று சட்டத்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கையில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு பேசியதாவது: மயிலாப்பூர் தொகுதியில் 3 கிலோ மீட்டர் பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. கால்வாயும் ஆற்றுடன் இணையும் பகுதியும் சமமாக இருப்பதால் கால்வாயில் செல்லும் தண்ணீர் ஆற்றுடன் கலக்காமல் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விடுகிறது.அந்த நேரம் படகு செல்லும் அளவு மழைநீர் தேங்குகிறது. மேலும் ஒரு மீட்டர் அளவிற்கு கால்வாயில் மணல் தேங்கி நிற்கிறது. அதனை தூர்வாரினால் மழை வெள்ளம் தேங்காது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: மயிலாப்பூர் தொகுதியில் மழைநீர் தேங்குகிறது என்று இதற்கு முன்பே சொல்லியிருந்தால் படகு செல்லும் பாதையை கார் செல்லும் பாதையாக மாற்றி இருப்பேன். நான் முருகன். நீயோ வேலு. வேலு சொல்லி முருகன் கேட்காமல் இருப்பேனா.

The post வேலு சொல்லி முருகன் கேட்காமல் இருப்பேனா?.. மயிலாப்பூர் திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.

Tags : Murugan ,Velu ,Minister ,Duraimurugan ,Mylapore DMK MLA ,CHENNAI ,Mylapore Assembly ,Maylai Velu ,Law Department ,Tamil Development Department ,Buckingham Canal ,Mylapore ,Durai Murugan ,Dinakaran ,
× RELATED கட்டுமான பொருள் விலை, தினக்கூலி விவரம்...