×

சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்: விரைவில் தினசரி இயக்கப்படும்


நாகர்கோவில்: சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 20ம் தேதி, தொடங்கி வைப்பதாக இருந்து தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை தினசரி இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 4.45க்கு புறப்பட்ட இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி சந்திப்பு வழியாக பகல் 1.45க்கு நாகர்கோவில் சந்திப்பை வந்தடைந்தது. பின்னர் மதியம் 2.20க்கு மீண்டும் புறப்பட்டு சென்றது. சுமார் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதில் அதிகாரிகள், ஊழியர்கள் தவிர வேறு யாரும் இல்லை. இந்த ரயிலில் மொத்தம் இன்ஜினுடன் சேர்த்து 8 பெட்டிகள் இருந்தன.

வாராந்திர ரயிலாக இருந்த போது, வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் இருந்தது. தற்போது முழுமையாக காவி வண்ணத்தில் ரயில் பெட்டிகள் இருந்தன.அதிகாரிகள் கூறுகையில், சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கியது. ஆனால் எழும்பூரில் இருந்து தான் இயக்கப்படும். பயண நேரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உத்தேசமாக காலை 5 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, பகல் 1.50க்கு நாகர்கோவில் வந்தடையும். மறு மார்க்கத்தில் பகல் 2.20க்கு, நாகர்கோவிலில் புறப்பட்டு, இரவு 11.15க்கு எழும்பூரை சென்றடையும். என்றனர்.

The post சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்: விரைவில் தினசரி இயக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,Chennai ,Nagercoil ,Modi ,
× RELATED டெல்லி – வாரணாசி வந்தே பாரத் ரயிலில்...