×

பஞ்சர் கடையில் நிறுத்தி வைத்திருந்த லாரியில் இருந்து பேட்டரிகளை திருடியவர் கைது

செய்யாறு, ஜூன் 21: செய்யாறு அருகே பஞ்சர் கடையில் நிறுத்தி வைத்திருந்த லாரியில் இருந்து பேட்டரிகளை திருடியவரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சந்தைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(35), வெல்டிங் தொழிலாளி. இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரது லாரியை தனது வீட்டின் அருகில் உள்ள மணிகண்டன் என்பவரின் பஞ்சர் கடை அருகில் நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு லாரியில் இருந்த இரண்டு பேட்டரிகளை மர்ம நபர் ஒருவர் திருடிக் கொண்டிருந்ததை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக அவரை மடக்கி பிடித்து தூசி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி ஆட்டந்தாங்கல் கிராமம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சதீஷ்குமார்(43) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பாலாஜி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை நேற்று கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.

The post பஞ்சர் கடையில் நிறுத்தி வைத்திருந்த லாரியில் இருந்து பேட்டரிகளை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Seiyaru ,Balaji ,Marshkamedu ,Vembakkam taluk ,Seyyar ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில்...