×

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்க தமிழக அரசு தொடங்கியுள்ள புதிய இணையதளம்!!

சென்னை : பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும் www.pocsoportal.tn.gov.in என்ற இணையதளம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய இணையதளத்தை இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலம் பாலியல் வழக்குகளை தனியாக கவனித்து விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் குறித்த விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் நலனையும் உறுதிபடுத்திட தனிநபர் பராமரிப்பு திட்ட செயலி (Individual Care Plan Application), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் நல இல்லங்களையும் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஆய்வு மற்றும் கண்காணிப்பு செயலி ( Inspection and Monitoring application ) ஆகியவற்றின் பயன்பாட்டையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய ஆதரவற்ற கைம்பெண்களுக்கு அரசிடம் இருந்து எளிதில் நலத்திட்ட உதவிகள் கிடைத்திடும் வகையில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான http://tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணைய பயன்பாட்டையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்க தமிழக அரசு தொடங்கியுள்ள புதிய இணையதளம்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Minister of Youth ,Welfare, ,Sports ,Development ,and Special ,Implementation ,Department ,Udayanidhi Stalin ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...