×

தன்னிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்ட சிஐஎஸ்எப் பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெகதீப் தன்கருக்கு திமுக எம்பி அப்துல்லா கடிதம்

சென்னை: தன்னிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்ட சிஐஎஸ்எப் பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெகதீப் தன்கருக்கு திமுக எம்பி அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணை தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு திமுக எம்.பி அப்துல்லா கடிதம் எழுதினார். கடிதத்தில் கூறியதாவது, ,நேற்று பிற்பகல் 3 மணியளவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, அங்கு பணியில் இருந்த CISF அதிகாரிகள் தன்னை தடுத்து நிறுத்தி நாடாளுமன்றத்துக்கு தான் வந்ததன் நோக்கம் என்ன என விளக்க வேண்டும் என பணியில் இருந்த CISF பாதுகாவலர்கள் கட்டாயப்படுத்தியதாகவும்.

மேலும், “தமிழ்நாடு மக்கள் மற்றும் மாநில அரசின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் உள்ள ஒருவரிடம், CISF பாதுகாவலர்களின் இந்த நடத்தையால் தவறு. நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது இதுபோன்ற தவறான நடத்தை இதற்கு முன்பு நடந்ததில்லை. ஆனால் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள CISF பாதுகாவலர்களின் செயல்பாடுகள் மிகுந்த வருத்ததை அளிக்கிறது ”என்றும் தன்னிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்ட சிஐஎஸ்எப் பணியாளர்கள் மற்றும் தவறிழைத்த அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் உறுதி செய்யவேண்டும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

The post தன்னிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்ட சிஐஎஸ்எப் பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெகதீப் தன்கருக்கு திமுக எம்பி அப்துல்லா கடிதம் appeared first on Dinakaran.

Tags : CISF ,Dimuka MP ,Abdullah ,Jagdeep Tankar ,Chennai ,Dimuka MP Abdullah ,Dima ,Dimuka ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்திற்கு சென்ற திமுக எம்பி...