×

குடவாசல் வட்டார வள மையத்தில் 40 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி

 

வலங்கைமான், ஜூன் 19: திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவிலான கணிதம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் தேர்வு தேர்வு சம்பந்தமான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் மாணவர்களின் திறன் அடிப்படையில் கற்றல் கற்பித்தலில் மேம்பாடு அடையவும், மேலும் மாணவ, மாணவிகள் அரசு சார்பாக நடைபெறும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற வட்டார அளவிலான பட்டதாரி ஆசிரியர்களுக்கு இப் பயிற்சியை மாவட்ட அளவில் சிறப்பாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு சுமார் 40 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது.இப்பயிற்சியை குடவாசல் வட்டார கல்வி அலுவலர்கள் குமரேசன், ஜெயலக்ஷ்மி மற்றும் குடவாசல் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பூபாலன் ஆசிரியப் பயிற்றுநர்கள்ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்கள்.

The post குடவாசல் வட்டார வள மையத்தில் 40 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Gudawasal Regional Resource Centre ,Valangaiman ,Guruvasal Regional Resource Centre ,Thiruvarur District ,Guadawasal Regional Resource Centre ,Dinakaran ,
× RELATED மாணவர்கள் புதுமையாக சிந்திப்பது...