×

கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

 

கறம்பக்குடி, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் 3 நாட்கள் நடைபெறும் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி தாலுகா அலுவலகத்தில் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாயம் நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்ட கலால் மேற்பார்வை அலுவலர் கருணாகரன் கலந்து கொண்டு தலைமை வகித்து மழையூர் சரத்திற்கு உட்பட்ட பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

மேலும் நேற்று காலை மழையூர் சரத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களின் கணக்குகளை சரி பார்த்தார். நாளை காலை கறம்பக்குடி சரத்திற்கு உட்பட்ட பல்வேறு வருவாய் கிராமங்களின் கணக்குகளும் சரி பார்க்கப்பட்டு மாலை 3 மணி அளவில் குடிகள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் ஜமாபந்தியில் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயன் பெற்று கொள்ளலாம் என கறம்பக்குடி வருவாய் துறை சார்பாக தெரிவித்துள்ளனர். இந்த ஜமாபந்தியில் கறம்பக்குடி தாசில்தார் ஜபருல்லா மற்றும் வருவாய் துறையினர் துணை தாசில்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Karambakudi Taluk Office ,Karambakudi ,Karambakudi taluk ,Pudukottai district ,Jamabandi taluk ,Jamabandi ,Dinakaran ,
× RELATED அரியலூர் வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் ஆணை