×

விருதுநகரில் இன்று மின்தடை

விருதுநகர், ஜூன் 19: விருதுநகரில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மின்கோட்டத்தில் உயர் அழுத்த மின்பாதை கம்பிகளுக்கு அருகில் செல்லும் மரக்கிளைகளை அகற்றும் பணி நடக்க இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால் அகமதுநகர், பரங்கிநாதபுரம் தெரு, நேருஜிநகர், எஸ்.எஸ்.எஸ். மாணிக்கம் தெரு, ஏடிபி காம்பவுண்டு, புல்லலக்கோட்டை ரோடு, இந்திரா நகர்,

மேற்கு பாண்டியன் காலனி, கிழக்கு பாண்டியன் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, பாலாஜி நகர், ஆயம்மாள் நகர், பராசக்தி காலனி, லட்சுமி நகர்,பெத்தனாட்சிநகர், மீனாட்சிநகர், என்.ஜி.ஓ. நகர் மேற்கு, என்.ஜி.ஓ. நகர் கிழக்கு, ஹெசிவுசிங் போர்டு, கே.உசிலம்பட்டி, கருப்பசாமி நகர், பேளம் பட்டி, பேராலி ரோடு, சத்தியசாய் நகர், காந்திநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post விருதுநகரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Power Board ,Executive Engineer ,Muralitharan ,Dinakaran ,
× RELATED பொருளாதாரத்தில்...