×

விருதுநகர் அருகே ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான பெண் குழந்தை பிறந்தது

 

விருதுநகர், ஜூன் 19: விருதுநகர் அருகே ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. விருதுநகர் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி அஜித். இவரது மனைவி மகாலட்சுமி(25). கர்ப்பிணியான இவருக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடினர். இவர்களது அழைப்பை ஏற்று விருதுநகரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று மகாலட்சுமியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

மருளுத்து அருகே வரும் போது பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தி மருத்துவ உதவியாளர் ராஜலக்ஷ்மி பிரசவம் பார்த்தார். இதில் மகாலட்சுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கு உதவியாக ஓட்டுநர் திருமலைக்கண்ணன் இருந்தார். பின்னர் எம்.அழகாபுரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனர்.

The post விருதுநகர் அருகே ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான பெண் குழந்தை பிறந்தது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Ajit ,Meenakshipura ,Mahalakshmi ,
× RELATED பொருளாதாரத்தில்...