×

நிதி நிறுவன மேலாளரை தாக்கிய 2 பேர் கைது

சாத்தூர், ஜூன் 19: பணம் வசூல் செய்ய சென்ற நிதி நிறுவன வசூல் மேலாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சாத்தூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் உமையப்பன் நாகராஜ்(29). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த ராமகுரு என்பவரிடம் கடன் தொகையை வசூல் செய்ய சென்று பணம் கேட்டார். அப்போது கடனை கட்ட முடியாது என கூறி ராமகுரு மற்றும் போஸ் சேர்ந்து கம்பால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த உமையப்பன் நாகராஜ் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து உமையப்பன் நாகராஜ் கொடுத்த புகாரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

The post நிதி நிறுவன மேலாளரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chatur ,Umaiyappan Nagaraj ,Chatur Chekkadi Street ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது