×

பாட்டியை தாக்கிய பேரன் கைது

வேடசந்தூர், ஜூன் 19: வேடசந்தூர் அருகே முருநெல்லிகோட்டை ஊராட்சி சல்லயகவுண்டனூரை சேர்ந்தவர் கமலம் (73). இவர் தனது தங்கை வீரம்மாளுடன் (65) வசித்து வருகிறார். இவரது மகன் வழிபேரன் நாகராஜ் (23). கூலித்தொறிலாளி. இவர் சம்பவத்தன்று வீரம்மாளிடம் செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கமலம் தகராறை விலக்கி விட வந்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த நாகராஜ் கமலத்தினை பிடித்து இழுத்து வீட்டின் கேட்டின் மீது பலமாக மோதினார். இதில் கமலத்தின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரில் வேடசந்தூர் எஸ்ஐ பாண்டியன் வழக்குப்பதிந்து நாகராஜை கைது செய்து நேற்று மாலை வேடசந்தூர் கிளை சிறையில் அடைத்தார்.

The post பாட்டியை தாக்கிய பேரன் கைது appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Kamalam ,Murunellikot Panchayat Challayakoundanur ,Veerammal ,Labheran Nagaraj ,
× RELATED வேடன்சந்தூர் அருகே திருடிய இருசக்கர...