×

அரசு பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் தகராறு

புவனகிரி, ஜூன் 18: கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு நேற்று அரசு பேருந்து ஒன்று வந்தது. அப்போது பு.முட்லூர் பேருந்து நிறுத்தத்தில் இருவர் பேருந்தில் ஏறியுள்ளனர். அவர்கள் சிதம்பரத்துக்கு டிக்கெட் கேட்டனர். அப்போது அவர்களிடம் கண்டக்டர் தலா ரூ.15 கட்டணம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் இருவரும் ரூ.11 தான் கட்டணம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் பேருந்தை பயணிகளுடன் புவனகிரி காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். பின்னர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது பயணிகள் தங்களுக்கு காலதாமதம் ஆவதால் உடனடியாக பேருந்தை எடுக்க வேண்டும் என கூச்சலிட்டனர். இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்தில் விட்டு, விட்டு டிரைவர் மற்றும் கண்டக்டர் மற்ற பயணிகளுடன் சிதம்பரத்துக்கு பேருந்தை எடுத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் தகராறு appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Cuddalore ,Chidambaram ,Pu. Mudlur ,
× RELATED சிதம்பரம் கோயில் தீட்சிதர்களை கண்டித்து போராட்டம்..!!