×

தூக்குபோட்டு வாலிபர் சாவு

விழுப்புரம், ஜூன் 7: விழுப்புரம் அருகே குடியை நிறுத்த முடியாத வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே கொங்கம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி(எ)புஷ்பராஜ்(32). கூலி வேலை செய்து வந்தார். அடிக்கடி குடிக்கும் பழக்கம் உடையவர். ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையாகி விட்டாராம். இதிலிருந்து மீள அரசு மருத்துவமனையில் உள்ள போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து அண்மையில் வீட்டிற்கு வந்த புஷ்பராஜ் மீண்டும் குடியை மறக்க முடியாமல் மது அருந்தி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்ற பிறகு அங்கிருந்த மரத்தில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ஜெயபிரியா, வளவனூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூக்குபோட்டு வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Murali (A) Pushparaj ,Konkampattu ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்!