×

மருத்துவ மாணவர் மாயம்

புதுச்சேரி, ஜுன் 7: ஆந்திரா மாநிலம் சூரியபேட்டா பகுதியை சேர்ந்தவர் வனம் ராகுல் வர்மா (26). இவர் புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தாயார் வனம் ஜோதியுடன் உருளையன்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 4ம்தேதி வனம் ராகுல் வர்மா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்ட சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் கல்லூரிக்கும், அவரது நண்பர்களை தொடர்பு கொண்டு வனம் ராகுல் வர்மா குறித்து விசாரித்துள்ளார். எந்த தகவல் கிடைக்காத நிலையில், தனது மகனை கண்டுபிடித்து தருமாறு புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து வனம் ராகுல் வர்மாவை தேடி வருகின்றனர்.

The post மருத்துவ மாணவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Vanam Rahul Verma ,Suryapeta ,Andhra Pradesh ,MPBS ,Krumambakkam, Puducherry ,Urulayanpet ,Vanam Jyoti ,Mayam ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!