×

தமிழ்நாட்டில் உள்ள 37,553 அரசு பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 37,553 அரசு பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 17,221 அரசு பள்ளிகளில் ஜூன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் உள்ள 37,553 அரசு பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Department of School Education ,Chennai ,School Education Department ,Secondary ,
× RELATED வரும் கல்வியாண்டில் மாணவர்கள்...