×

நாய்கள் பயன்படுத்தி 7 உடும்புகளை வேட்டையாடிய 2 பேர் கைது வனத்துறையினர் அதிரடி தண்டராம்பட்டு அருகே வனப்பகுதியில் படம் உண்டு

 

தண்டராம்பட்டு, மே 27: தண்டராம்பட்டு அருகே வனப்பகுதியில் நாய்களை பயன்படுத்தி 7 உடும்புகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை பெண்ணையாறு காப்புக்காடு வேப்பூர்செக்கடி மேற்கு பீட் பகுதியில் நேற்று வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள மரத்தின் அருகே இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், இளையாங்கன்னி ஊராட்சியை சேர்ந்த மைக்கேல் அலெக்சாண்டர்(32), அலென்ஸ் வின்சென்ட்ராஜ்(24) என்பதும் அங்குள்ள உடும்புகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட 7 உடும்புகள் மற்றும் பைக்கை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வேட்டையாடுவதற்காக நாயை பயன்படுத்தியது தெரியவந்தது. எனவே, நாய்களின் உரிமையாளர்கள் தங்கமணி(27), மற்றொரு தங்கமணியை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். தொடர்ந்து, இதுகுறித்து வேலூர் வன பாதுகாப்பு அலுவலர் பத்மா, மாவட்ட வன அலுவலர் யோகேஷ் கார்க் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர்களது உத்தரவின்படி இருவரையும் சாத்தனூர் வன அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், இருவரும் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

 

The post நாய்கள் பயன்படுத்தி 7 உடும்புகளை வேட்டையாடிய 2 பேர் கைது வனத்துறையினர் அதிரடி தண்டராம்பட்டு அருகே வனப்பகுதியில் படம் உண்டு appeared first on Dinakaran.

Tags : Forest department ,Thandarampatu ,Thandarampattu ,forest ,Thiruvannamalai District ,Chatanur Dam Penanyar Reserve Forest Vepurchekkadi West Beet ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில்...