×

ஸ்ட்ராஸ்போர்க் டென்னிஸ் மேடிசன் கீஸ் அசத்தல்

ஸ்ட்ராஸ்போர்க் சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தினார். பரபரப்பான பைனலில் சக வீராங்கனை டேனியலி கோலின்சுடன் (30 வயது, 10வது ரேங்க்) மோதிய மேடிசன் கீஸ் (29 வயது, 12வது ரேங்க்) 6-1, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் கீஸ் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது. ஒட்டுமொத்தமாக இது அவரது 8வது டபுள்யு.டி.ஏ பட்டமாகும்.

 

The post ஸ்ட்ராஸ்போர்க் டென்னிஸ் மேடிசன் கீஸ் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Strasbourg Tennis ,Madison ,Keys ,Madison Keys ,Strasbourg International Tennis Series ,Danielle Collins ,Strasbourg ,Dinakaran ,
× RELATED இத்தாலி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜெங், மேடிசன்