×

புதுச்சேரியில் இருந்து கடத்திவந்த 2880 மதுபாட்டில் பறிமுதல்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் உத்தரவின்படி, கலால் டிஎஸ்பி வேல்முருகன், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் தலைமையில் கள்ள மது விற்பனையை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு கார் நிறுத்தி சோதனை நடத்தி அதில் இருந்த 2400 பாண்டிச்சேரி மதுபாட்டில்களை காருடன் பறிமுதல் செய்தனர். காரில் இருந்தவர் தப்பிவிட்டார். காரை ஓட்டிவந்த கார்த்திக் (28) கைது செய்து விசாரணை நடத்தியதில், பைக் மூலம் ஒருவர் மதுபாட்டில்கள் கடத்திச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடிக்க விரட்டிச் சென்றபோது பைக்குடன் மதுபாட்டில்களை போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார். பைக் மற்றும் அதில் இருந்த 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மதுபாட்டில்களை கடத்திவந்ததாக சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த குமாரி (55) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர்களை மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். இதுகுறித்து மதுராந்தகம் கலால் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post புதுச்சேரியில் இருந்து கடத்திவந்த 2880 மதுபாட்டில் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Madhurandakam ,Chengalpattu District ,Superintendent ,Police Saipraneeth ,DSP Velmurugan ,Maduradakam ,Inspector ,Paripuranam ,Athur ,Achirupakkam ,