×

காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன் வீட்டு முன் விஷம் குடித்து சென்னை பெண் தற்கொலை முயற்சி: திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி கைவிட்டதாக, வாலிபர் வீட்டு முன், சென்னை இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண். பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த (29) வயது வாலிபர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேலும், சென்னை குன்றத்தூரில் தனியாக வீடு எடுத்து கணவன், மனைவியாக கடந்த ஓராண்டாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன், இளம்பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இது குறித்து வாலிபரின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் சென்னைக்கு சென்று இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதம் இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். பின்னர் இருவரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், வாலிபருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், வாலிபரிடம் கேட்டபோது, அவர் திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த இளம்பெண், கடந்த 22ம் தேதி இரவு காதலன் வீட்டு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த பெண்ணின் பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடியோ வைரல்
இதனிடையே, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் இளம்பெண், இந்த விஷயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

The post காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன் வீட்டு முன் விஷம் குடித்து சென்னை பெண் தற்கொலை முயற்சி: திண்டுக்கல்லில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dindigul ,Salipudur ,Pattiveeranpatti, Dindigul district ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு