×

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் கிராமம் வினோபாஜி நகரை சேர்ந்தவர் கோகுல் (30). டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகமதி (24). இவர்களுக்கு சஞ்ஜனா (6), க்ரிஷிகா (1) என இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. கடந்த மாதம் கோகுலுடன் சண்டை போட்ட சுகமதி, கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தனது உறவினரான பெரியம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சுகமதி மற்றும் குழந்தைகள் எழுந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது பெரியம்மா, வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, சுகமதி மற்றும் குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், விஷத்தினால் இறந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து தேவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ethapadi ,Gokul ,Vinobaji Nagar ,Village Agraharam ,Pullakoundambatti, ,Ethapadi, Salem District ,Sugamathi ,Sanjana ,Krishika ,
× RELATED சோழபுரம் அருகே காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு