×

வாக்கு பதிவு இயந்திரங்களை 3 ஆண்டுகள் பாதுகாக்க உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்துக்கு கபில் சிபல் வலியுறுத்தல்

புதுடெல்லி,மே 25: மாநிலங்களவை சுயேச்சை எம்பியும் மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் நேற்று கூறுகையில், ‘‘மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களின் பதிவேடுகளை குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகளை வாக்கு எண்ணிக்கைக்கு முன் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் சட்ட விரோதமாக உறுப்பினரை தேர்வு செய்வது தடுக்கப்படும். இது ஒரு முக்கியமான ஆதாரம் என்பதால் இவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும். வழக்கமாக தேர்தல் ஆணையம் இவற்றை 30 நாட்கள் மட்டுமே பராமரிக்கிறது. தேர்தல் முடிவுகள் வௌியிடப்பட்டு அரசு அமைந்து விட்டால் எதுவும் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, வாக்கு பதிவு இயந்திரங்களை 3 ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்க வேண்டும்’’ என்றார்.

The post வாக்கு பதிவு இயந்திரங்களை 3 ஆண்டுகள் பாதுகாக்க உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்துக்கு கபில் சிபல் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kapil Sibal ,Supreme Court ,New Delhi ,Rajya ,Sabha ,Dinakaran ,
× RELATED உங்க டிஎன்ஏவிலேயே அது இல்லையே மோகன்...