×

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தோரணமலையில் கிரிவலம் : கொட்டும் மழையிலும் திரளானோர் பங்கேற்பு


கடையம்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு கடையம் அடுத்த தோரணமலையில் கிரிவலம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். கடையம் அருகே தோரணமலையில் அமைந்துள்ள முருகன் கோயில் புராண சிறப்புமிக்கது. தனித்துவமிக்க இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் நடந்து வருகிறது. அந்தவகையில் வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடந்தது. அப்போது மழை கொட்டியபோதும் இதில் ஏராளமான பக்தர்கள் குடை பிடித்தவாறு கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து உலக நன்மைக்காகவும் பாரத நாட்டில் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் மேம்படவும், மாணவர்கள் கல்வியில் மேம்படவும், இயற்கை பேரிடர்களால் மக்களுக்கு துன்பம் ஏற்படாமல் இருக்கவும் தோரணமலை  முருகனை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

The post வைகாசி விசாகத்தை முன்னிட்டு தோரணமலையில் கிரிவலம் : கொட்டும் மழையிலும் திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Krivalam ,Thoranamalai ,Vaikasi Visakha ,Kadayam ,Vaikasi Visakham ,Murugan ,Dinakaran ,
× RELATED பௌர்ணமி கிரிவலத்தையொட்டி...