×

திருவெறும்பூர் அருகே குழந்தை தொழிலாளர் மீட்பு

திருவெறும்பூர், மே 24: திருவெறும்பூர் அருகே குழந்தை தொழிலாளரை மீட்டதொடு வேலை வாங்கிய உரிமையாளர் மீது தொழிலாளர் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவெறும்பூர்பழைய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கி வரும் ஆட்டோ மற்றும் டீசல் ஒர்க்ஸ் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் வேலை பார்ப்பதாக மாவட்ட குழந்தை மற்றும் வளர் நிலம் பருவ தொழிலாளர் தடை மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆய்வு செய்தபோது 13 வயது மதிக்கத்தக்க சிறுவனை அதன் உரிமையாளர என திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (51) என்பவர் வேலை வாங்கி வருவது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் அந்த சிறுவனை மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் மீட்டதோடு அதன் உரிமையாளர் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவெறும்பூர் அருகே குழந்தை தொழிலாளர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tiruverumpur ,Thiruverumpur ,
× RELATED திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது