×

வரட்டுபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கடந்த 4 நாட்களில் 5.88 அடி நீர் மட்டம் உயர்வு

 

அந்தியூர், மே 24: அந்தியூர் அருகே வரட்டுபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரரித்து, கடந்த 4 நாட்களில் 5.88 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் வரட்டுபள்ளம் அணை அமைந்துள்ளது. இது வன விலங்குகளின் தாகம் தீர்க்கவும், மீன் வளர்ப்புக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கல்மடுவு பள்ளம், கும்பரவாணி பள்ளம், தாமரைக்கரை மேற்கு பகுதி மழை பெய்து வருவதன் காரணமாக வரட்டுபள்ளம் அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்றுமுன்தின இரவு நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 253 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

33.46 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17.09 அடியில் இருந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 22.97 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 5.88 அடி உயர்ந்துள்ளது. வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் 5.46 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும்‌ மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வரட்டுபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கடந்த 4 நாட்களில் 5.88 அடி நீர் மட்டம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Varatupallam dam ,Anthiyur ,Varattupallam ,Western Ghats ,Andhiur, Erode district ,Varattupallam dam ,Dinakaran ,
× RELATED அந்தியூர் அருகே கால்நடை தீவனப் போருக்கு மர்மநபர்கள் தீ வைப்பு