×

சித்தூர் மாவட்டத்தில் 8 பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம் கெங்கையம்மன் திருவிழாவில் கூழ் ஊற்றி படையலிட்ட பெண்கள்

*ஏரியில் இன்று சிரசு கரைக்கப்படுகிறது

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் 8 பகுதிகளில் கெங்கையம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கூழ் ஊற்றி ஏராளமான பெண்கள் கும்ப படையலிட்டனர். ஏரியில் இன்று சிரசு கரைக்கப்படுகிறது. சித்தூர் மாநகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடுத்தெருகெங்கை அம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு சித்தூர் மாநகரத்தில் 8 பகுதிகளில் நடுத்தெரு கங்கை அம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நேற்று பஜார் தெருவில் நடுத்தெரு கெங்கை அம்மன் சிரசு நள்ளிரவு 12 மணி அளவில் நிறுவப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காலை சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி மதியம் கும்ப படையல் இட்டு வழிபட்டனர். அதேபோல் கிரீம்ஸ்பேட்டை பகுதியில் கெங்கை அம்மன் சிரசு அனைத்து தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அதிகாலை 4 மணி அளவில் அம்மன் சிரசு நிறுவப்பட்டது.

அதேபோல் கொங்கா ரெட்டி பள்ளி பகுதியில் கருமாரியம்மன் கோயில் எதிரே நடுத்தெரு கெங்கை அம்மன் நிறுவப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் சந்தப்பேட்டை பகுதியில் நடுத்தெரு கெங்கை அம்மன் சிரசை ஊர்வலமாக எடுத்து வந்து அதிகாலை 6 00 மணி அளவில் நிறுவப்பட்டு பின்னர் கெங்கை அம்மனின் திரை திறக்கப்பட்டது.

தொட்டி பள்ளி முருக்கம்பட்டு மங்க சமுத்திரம் லெனின் நகர் காலனி கட்ட மஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் நடுத்தெரு கெங்கை அம்மன் சிரசை ஒவ்வொரு தெருவாக ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனின் சிரசு நிறுவப்பட்டது. அதிகாலை முதல் அம்மனுக்கு அனைத்து பகுதிகளிலும் கூழ் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் பக்தர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப ஆடு, கோழி உள்ளிட்டவை படையல் கொடுத்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பின்னர் மதியம் 3 மணிக்கு மேல் அனைத்து பகுதிகளிலும் அம்மனுக்கு கும்ப படையல் இட்டு வழிபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு சித்தூர் மாநகரத்தில் அனைத்து பகுதிகளிலும் அமைந்துள்ள நடுத்தெரு கெங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 6 மணிக்கு மேல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதனை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் அம்மனின் சிரசு இறக்கம் செய்யப்பட்டு, பின்னர் முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று வானவேடிக்கையுடன் மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரிகளில் அம்மனை நிமர்ஜனம் செய்வார்கள்.

சித்தூர் மாநகரத்தில் 8 பகுதிகளில் நடுத்தெரு கெங்கை அம்மன் திருவிழா நடைபெற இருப்பதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் காவல்துறை சார்பில் ஆங்காங்கே சிசி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எந்த ஒரு பகுதியிலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்து கூழ் ஊற்றினர். இதற்காக திரளான பெண்கள் தலையில் கூழ் குடங்களை சுமந்து வந்து கொப்பரையில் கூழ் ஊற்றினர். பின்னர் கும்ப படையல் இட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
இன்று அம்மனின் சிரசை ஊர்வலமாக ஏரியில் கரைக்கப்படுவதால் ஏராளமான பக்தர்கள் வரக்கூடும். இதனால் போலீசார் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சித்தூர் மாவட்டத்தில் 8 பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம் கெங்கையம்மன் திருவிழாவில் கூழ் ஊற்றி படையலிட்ட பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Koalagala ,Chittoor district ,Kengaiyamman festival ,Sirasu ,Chittoor ,Kumbha ,Nadutherugengai Amman ,Dinakaran ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்