×

ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது மேலும் ஒரு வன்முறை காட்சி: வாக்குப்பதிவு இயந்திரத்தை வீசி எறிந்த ஒய்.எஸ்.ஆர் காங். வேட்பாளர்

அமராவதி: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி வாக்கு இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்திய காட்சி வைரலாகி வருகிறது. ஆந்திராவில் கடந்த 13ம் தேதி நடந்த வாக்குப்பதிவு நாளிலும் அதன் பிறகு நடந்த வன்முறை சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. அதன்படி கடந்த 13ம் தேதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி வாக்கு இயந்திரத்தை கீழே போட்டு உடைத்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குச்சாவடி மையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் புகுந்த பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி அங்கிருந்த ஊழியர்களளை மிரட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்தார். அதனை தடுக்க முயன்ற வாக்குச்சாவடி முகவரி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்தின் காட்சியை தெலுங்கு தேசம் கட்சியினர் பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

The post ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது மேலும் ஒரு வன்முறை காட்சி: வாக்குப்பதிவு இயந்திரத்தை வீசி எறிந்த ஒய்.எஸ்.ஆர் காங். வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,YSR Congress ,Amaravati ,Pinnelli Ramakrishna Reddy ,
× RELATED வளர்ந்த நாடுகளில் உள்ளது போல்...