×

கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஆன்லைனில் இழந்த ₹1.99 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்

*உரியவரிடம் எஸ்பி வழங்கினார்

வேலூர் : கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஆன்லைனில் இழந்த ₹1.99 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவரிடம் எஸ்பி மணிவண்ணன் நேற்று வழங்கினார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா(27). இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு போனில் மர்ம நபர் மும்பையில் இருந்து தனியார் வங்கியின் வாடிக்கையாளர் மையத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுடைய வங்கி கிரெடிட் கார்டில் ரிவார்டு பாயின்ட்ஸ் நிறைய இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த ரிவார்டு பாயின்ட்ஸ் பெறுவதற்கு தான் அனுப்பி வைக்கும் லிங்கில் கூகுள் மூலம் டைப் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதை நம்பிய கார்த்திக் ராஜாவும் தனக்கு வந்த லிங்கில் உள்ளே சென்றவுடன் கிரெடிட் கார்டு நம்பர், சிவிவி மற்றும் ஓடிபி ஆகியவற்றை பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருடைய கிரெடிட் கார்டிலிருந்து ₹1 லட்சத்து 99 ஆயிரத்து 997 ரூபாய் பணத்திற்கு பொருட்கள் வாங்கி உள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதைப்பார்த்த கார்த்திக் ராஜா, கிரெடிட் கார்டு மூலம் மர்ம நபர் பணத்தை பறித்தது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சைபர் கிரைம் 1930 என்ற எண்ணில் புகார் செய்தார். மேலும் வேலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள் ளார். அதன் பேரில் கடந்த 30ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் இவ்வழக்கின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டதில் ஒரு மாதத்திற்குள்ளாகவே பாதிக்கப்பட்ட நபரின் இழந்த பணம் ₹1,99,997 முழுவதையும் மீட்டனர்.

இந்நிலையில் நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மீட்கப்பட்ட பணத்தை உரியவரிடம் கார்த்திக் ராஜாவிடம் எஸ்பி மணிவண்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர் புனிதா, எஸ்ஐ யுவராணி (தொழில்நுட்ப பிரிவு), பெண் தலைமை காவலர் சசிகலா, காவலர் சஞ்சய்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஆன்லைனில் இழந்த ₹1.99 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,SP Manivannan ,Karthik Raja ,Vellore district.… ,Dinakaran ,
× RELATED பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது 2...