×

பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

டெல்லி: ஜூன் 4-ம் தேதி பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டியளித்துள்ளார். ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இடங்கள் கிடைத்துவிடும் என ஜெய்ராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் “இது 4 கட்டங்களாக நடந்துள்ள தேர்தலில் 379 எம்பி. தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. 4 கட்டத் தேர்தல் முடிந்த பின், பிரதமர் பிரச்சார கூட்டத்தில் பேசும் வார்த்தைகளே சர்ச்சைக்குரியதாக உள்ளன. நாட்டில் எந்த அலையும் இல்லை; பாஜகவினரின் பிரச்சாரமே மக்களிடம் எடுபடவில்லை, அரசின் மீது மக்களுக்கு கோபம் ஏற்பட்டு உள்ளது, மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,Delhi ,Modi ,Jairam ,India ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...