×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் ஜூன் 7க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கெடு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் ஜூன் 7க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட, அப்போதைய காவல் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. வழக்கு முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் ஜூன் 7க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கெடு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi gunpowder ,Chennai High Court ,Gedu ,Chennai ,ICourt ,Tuthukudi gunfire incident ,Chennai High Court Gedu ,Dinakaran ,
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...