×

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்

டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் அறிக்கை குறித்த மோடியின் பேச்சு பேசுபொருளான நிலையில் காங். தலைவர் கார்கே பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். பிரதமரின் பேச்சு தனக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. முதற்கட்ட தேர்தலில் கிடைத்த அதிர்ச்சியால் இப்படி பேசுவார்கள் என்பதை எதிர்பார்த்தேன். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு நீதி வழங்குவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாததை மோடி பேசி வருகிறார் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Kharge ,PM Modi ,Delhi ,Narendra Modi ,Modi ,President ,PM ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…