×

மண்ணெண்ணெய் அளவை குறைத்த ஒன்றிய அரசு: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டிற்கான மண்ணெண்ணெய் அளவை ஒன்றிய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்துள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் விளக்கம் அளித்துள்ளார். 2021ல் 8,500 கிலோ லிட்டர் வழங்கப்பட்ட நிலையில் 2022ல் 4,500 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 2,300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

The post மண்ணெண்ணெய் அளவை குறைத்த ஒன்றிய அரசு: அமைச்சர் சக்கரபாணி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Minister ,Chakrapani ,CHENNAI ,Tamil Nadu ,Food Minister ,Kudiatham ,
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...