×

தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்ட நிலையில் ரூ.4 கோடி பணத்தை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? :பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல என்று பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 6ம் தேதி இரவு சென்ற ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவிற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவரது ஓட்டலில் வேலை செய்யும் சதீஷ் (33), அவரது தம்பி நவீன் (31), பெருமாள் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஆசைதம்பி, முருகன், பாஜ மாநில தொழில்துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், ஜெய்சங்கர் ஆகியோரும் பணத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 8 பேரும் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 22ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர் 10 நாள் அவகாசம் கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் ஆசைதம்பி, ஜெய்சங்கர், முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து மே 2ம் தேதி நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகிய இருவரும் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 2வது சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்ட நிலையில் ரூ.4 கோடி பணத்தை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள். மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். என்னை முழுவதுமாக குறி வைத்துள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி பணம் என்னுடையது அல்ல என பலமுறை கூறி விட்டேன். அரசியல் சூழ்ச்சி காரணமாகவே எனது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. எனக்கு தரப்பட்டுள்ள சம்மன் குறித்து வரும் மே மாதம் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளேன்.போலீசார் கடமையை செய்கின்றனர். என் தரப்பில் முழு ஒத்துழைப்பு தருவேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்ட நிலையில் ரூ.4 கோடி பணத்தை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? :பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Nayanar Nagendran ,Chennai ,Naynar Nagendran ,Tambaram railway ,Nella ,Nellai ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...