×

வேதாள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

சாயல்குடி, ஏப்.25: கடலாடி அருகே உள்ள சாத்தங்குடி வேதாளமுனீஸ்வரர் மற்றும் பரிவார கிராமதேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், குருக்கள் வேதமந்திரங்களுடன் துவங்கியது. தொடர்ந்து கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மஹா பூர்ணஹீதி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. மூன்று கால பூஜைகள் வரை நடத்தப்பட்டு யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு கோயில் கோபுர கலசம் மற்றும் மூலவர் விக்கிரகத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு வேதாளமுனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

The post வேதாள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Vedala Muneeswarar Temple ,Kumbabhishekam ,Sayalgudi ,Chatangudi Vedalamuneeswarar ,Parivar ,Cuddaly ,Go Pooja ,Vigneswara Pooja ,Lakshmi ,Navagraha ,Mrithanjana ,Maha Poornaheedi… ,
× RELATED முதுகுளத்தூர்- அபிராமம் சாலை...