×

பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்

அஸ்கிராம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஸ்கிராமில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு திரிணாமுல் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர் மம்தா, ” முன்பெல்லாம் மே 2 அல்லது 3ம் தேதிகளில் பொதுதேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாஜவை திருப்திப்படுத்துவதற்காக தான் தேர்தல் ஆணையம் 3 மாதங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. பாஜவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நோக்கமாகும்” என்றார்.

The post பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Mamata ,Asgram ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Trinamool ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...