×

என்னைப்பற்றி கவலை வேண்டாம்; மக்கள் ஆதரவுடன் மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வேன்: கெஜ்ரிவால் உறுதி

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். சிறை அறையில் இருக்கும் இரும்பு தடுப்புக்களுக்கு இடையே இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. கெஜ்ரிவாலை சந்தித்தது குறித்து அமைச்சர் சவுரப் கூறுகையில், ‘‘முதல்வர் கெஜ்ரிவால் தன்னை பற்றி பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார். அவர் வலிமையுடன் இருப்பதாகவும், டெல்லி மக்களின் ஆசிர்வாதத்துடன் மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வேன் என்றும் கெஜ்ரிவால் கூறினார்” என்றார்.

The post என்னைப்பற்றி கவலை வேண்டாம்; மக்கள் ஆதரவுடன் மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வேன்: கெஜ்ரிவால் உறுதி appeared first on Dinakaran.

Tags : Modi government ,Kejriwal ,New Delhi ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Directorate ,Tihar Jail ,Minister ,Saurabh Bharadwaj ,
× RELATED நான் சிறை சென்றாலும் ஜனநாயகம்...