×

கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு

பெங்களூரு:கர்நாடகாவில், பெங்களூரு ஊரக தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் தற்போதைய எம்பியுமான டி.கே.சுரேஷின் நெருங்கிய நண்பரும் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான கங்காதர் வீடு, கோணனகுண்டே தொகுதி காங்கிரஸ் தலைவர் தர் வீடு உள்பட 16 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

காலை தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரொக்க பணம் உள்பட சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரியவருகிறது. குறிப்பாக இந்த சோதனையில், மொத்தம் ₹1 கோடியே 33 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், 22 கிலோ 923 கிராம் தங்க நகைகள், வைரங்களையும் பறிமுதல் செய்தனர். இதனிடையில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

The post கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Karnataka Bengaluru ,Karnataka ,Gangadhar Veedu ,Bengaluru ,Congress ,TK Suresh ,Konanagunde ,Dhar Veedu ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்