×

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள்

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து நேற்று காலை, கோழி முட்டைகளை சேகரித்து, ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 1.5 லட்சம் முட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டிருந்தது. நாமகிரிப்பேட்டை அருகே காட்டுக்கொட்டாய் என்னுமிடத்தில், நேற்று மதியம் வந்தபோது, சாலையோரம் வண்டியை நிறுத்தி விட்டு அங்குள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக டிரைவர் சென்றார். அப்போது, சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து, ராசிபுரம் நோக்கி வந்த லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த முட்டை லாரி மீது மோதியது. இதில், லாரியில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நொறுங்கி நாசமானது. ரூ.5 லட்சம் மதிப்பிலான 1.5 லட்சம் முட்டைகள் சிதறி, சாலையில் மஞ்சள் மற்றும் வெள்ளை கருவுடன் பெருக்கெடுத்து ஓடியது.

The post சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள் appeared first on Dinakaran.

Tags : Namakirippet ,Namakilippet ,Mangalapuram ,Namakrippet ,Dinakaran ,
× RELATED ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப்...