×

பாம்பன் சுவாமி கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை

மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பிரப்பன்வலசை கிராமத்தில் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் கோயில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோயிலில் முருகன் சன்னதியில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தமிழக முன்னாள் முதல்வரும் ராமநாதபுரம் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜ கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ்சுக்கு எதிராக வாக்காளர்களை குழப்பும் வகையில் 5 ஒபிஎஸ்கள் போட்டியிட்டனர். மேலும், கடைசி நேரத்தில் பண பிரச்னையில் பாஜ மாவட்ட தலைவருடன் மோதல் ஏற்பட்டது. இப்படி பல்வேறு தலைவலிகளை எதிர்கொண்டு தேர்தலை சந்தித்து முடித்துள்ள ஓபிஎஸ், தனக்கு சாதகமான முடிவு வர வேண்டும் என்பதற்காக கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

The post பாம்பன் சுவாமி கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Pampan Swamy Temple ,Mandapam ,Sri Pamban Swamy Temple ,Mandapam Prabpanvalasai Village, Ramanathapuram District ,Chitra Pournami ,Murugan ,Chief Minister ,Tamil ,Nadu ,Ramanathapuram ,OPS ,
× RELATED மழை குறைந்ததால் விவேகானந்தர்...