×

வாரணாசியில் மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்தார் அமித்ஷா

வாரணாசி: பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தை வாரணாசியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். 2014 மற்றும் 2019ல் பிரதமர் மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.அங்கு மோடியின் தேர்தல் அலுவலகத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

அவர் கூறுகையில்,’ பிரதமர் மோடியின் அலுவலகத்தை இங்கு திறந்து வைப்பது எனக்கு கிடைத்த கவுரவம். 400 இடங்களை கடக்கும் இலக்கை நிறைவேற்ற பாஜவின் அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மோடி செய்த வளர்ச்சியின் செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்ல வேண்டும். மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற வாக்குறுதியையும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார். வாரணாசி தொகுதியில் கடைசி கட்டமாக ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

The post வாரணாசியில் மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்தார் அமித்ஷா appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Modi ,Varanasi ,Union Home Minister ,Union Minister ,Dinakaran ,
× RELATED 2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக...