×

சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை.. தாயின் ஆசை காதலன் வெறிச்செயல்..!!

சென்னை: சென்னை புழலில் கள்ளக்காதல் மோகத்தினால் 5 வயது சிறுமியை அடித்து கொலை செய்த தாயின் கள்ளகாதலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புழல் அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 5 வயதில் தேஜாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக விஜயகாந்தும், பிரியாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பெண் குழந்தை தேஜாஸ்ரீ தனது தாயுடன் வளர்ந்து வருவதாக தெரிகிறது. இதனிடையே பிரியாவிற்கும், அதே பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் ஸ்ரீனிவாசன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பிரியாவுடன் ஸ்ரீனிவாசன் தனிமையில் இருக்கும் போது பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அந்த குழந்தை இடையூறாக இருந்ததால் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாசன், தாய் வீட்டில் இல்லாத போது குழந்தை தேஜாஸ்ரீயை அடித்து கொலை செய்து வீட்டின் குளியலறையில் உள்ள தண்ணீர் நிரப்பப்பட்ட மிகப்பெரிய வாலியில் தூக்கி வீசியுள்ளார். இதனை தொடர்ந்து குழந்தை திடீரென பேச்சு மூச்சு இல்லாமல் சுயநினைவின்றி இருந்ததால் உடனடியாக அந்த குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஸ்ரீனிவாசன் அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் புழல் காவல் நிலையத்தில் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கள்ள காதலன் ஸ்ரீனிவாசனை கைது செய்தனர். மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு புழல் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் கள்ளக்காதல் மோகத்திற்கு குழந்தை தடையாக உள்ள காரணத்தினால் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை நல்லவன் போல் இளைஞர் தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை.. தாயின் ஆசை காதலன் வெறிச்செயல்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vijayakanth ,Gandhinagar ,Puzhal, Chennai ,Priya ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை