×

“இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளேன்” – நிதின் கட்கரி எக்ஸ் தளத்தில் பதிவு

மும்பை: மராட்டிய மாநிலம் புஷாத் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்கரியின் உடல்நிலை முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி வேட்பாளருர் ராஜஸ்ரீ பாட்டிலுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.

அவர் மயங்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மேடையில் இருந்தவர்கள் நிதின் கட்கரியை தூக்கி சென்றனர். நிதின் கட்கரி பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மயங்கி விளைந்த வீடியோ வைரலானதால் தொண்டர்கள் அவருக்கு என்னவாயிற்று என கவலையடைந்தனர்.

பின்னர் சிறுது நேரம் கழித்து யக்க நிலைக்கு சென்ற நிதின் கட்கரி முறையாக சிகிச்சை பெற்று, பின்னர் மேடைக்கு வந்து தனது பேச்சை தொடர்ந்தார். இதை தொடர்ந்து தான் ஆரோக்கியமாக உள்ளதாக நிதின் கட்கரி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

“மகாராஷ்டிர மாநிலம் புசாத் நகரில் நடைபெற்ற பேரணியின் போது வெப்பம் காரணமாக அசௌகரியம் ஏற்பட்டது. ஆனால் இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளேன், அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருட் கிளம்புகிறேன். உங்கள் அன்பிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.

The post “இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளேன்” – நிதின் கட்கரி எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Union Minister ,Nitin Khatkari ,Bushad ,Katkari ,BJP ,Nitin ,Dinakaran ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...